Sports

நீரஜ் சோப்ராவுக்கு மேலும் ஒரு தங்கம் : பாவோ நூர்மி தொடரில் முன்னணி வீரர்களை வீழ்த்தி அபாரம் !

ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா ஆசிய போட்டி, ஆசிய சாம்பியன்ஷிப், காமென்வெல்த் போட்டி என மூன்று பெரிய தொடர்களிலுமே தங்கம் வென்று அசத்தியிருந்தார். இதனால் அவர் மேல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்நது நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றில் 87.58 மீட்டருக்கு வீசி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதன் மூலம் தடகளத்தில் முதல் ஒலிம்பிக் தங்கத்தையும், அபினவ் பிந்த்ராவுக்கு பின்னர் ஒலிம்பிக் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார். அதோடு நிற்காத அவர், பின்லாந்தில் சர்வதேச ஈட்டி எறிதல் தொடர், டயமண்ட் லீக் தொடர், உலகத் தடகள சாம்பியன்ஷிப் தொடர் என அடுத்தடுத்து பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்த நிலையில், பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டுப் போட்டியிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று அசத்தியுள்ளார். இந்த போட்டியின் முதல் சுற்றில் நீரஜ் சோப்ரா 83.62 மீட்டர் தூரம் எறிந்த நிலையில், பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ஹெலாண்டர் 83.96 மீட்டர் தூரம் எறிந்து நீரஜை விட முன்னிலை பெற்றார்.

எனினும் விட்டுக்கொடுக்காத நீரஜ் சோப்ரா, மூன்றாவது சுற்றில் 85.97 மீட்டர் தூரம் எரிந்து தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார். இரண்டாவது இடத்தை பின்லாந்து வீரரான டோனி கெரானன் (84.19 மீட்டர்) , மூன்றாம் இடத்தை பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலண்டர் (83.96 மீட்டர்) ஆகியோர் பிடித்தனர்.

Also Read: காட்டுப்பகுதியில் 18 வயது இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: உ.பி-யில் தொடரும் கொடூரம்!