Sports

பும்ரா ஃபுல்டாஸ் வீசினால்கூட பேட்ஸ்மேன்களால் அடிக்க முடியாததற்கு காரணம் இதுதான்- பாக். ஜாம்பவான் கருத்து!

ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.

பின்னர் காயத்தால் பாதிக்கப்பட்ட அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது.

சமீபத்தில் ஐசிசி சார்பில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்து அசத்தி, டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா படைத்தார்.

தொடர்ந்து நடந்து முடிந்த ஐபிஎல் தொடரிலும் சிறப்பாக பந்துவீசிய பும்ரா தற்போது உலகக்கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற முக்கிய பங்கு வகித்தார். இந்த நிலையில், பும்ரா ஃபுல்டாஸ் வீசினால்கூட பேட்ஸ்மேன்களுக்கு அடிக்க முடியாத அளவு அவர்மீது பேட்ஸ்மேன்களுக்கு அச்சம் இருப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் வக்கார் யூனுஸ் கூறியுள்ளார்.

இது குறித்துப் பேசிய அவர், "நான் பல ஜாம்பவான்களுடன் விளையாடி இருந்தாலும் பும்ராவின் பந்துவீச்சு மிகவும் தனித்துவமானது என்றே கூறுவேன். கடந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர்களால் பும்ராவின் ஃபுல்டாஸ் பந்துகளைக்கூட அடிக்க முடியாயவில்லை. அதற்கு காரணம் அவரது பெயரைக் கேட்டாலே அவர்களுக்கு அச்சம்தான் இருக்கிறது.

பும்ரா பேட்டர்களின் மனதில் பயத்தை விதைத்து இருப்பதால் . அவர் ஃபுல்டாஸ் வீசினால்கூட பேட்ஸ்மேன்களுக்கு அதை அடிக்க கடினமாக உள்ளது.பும்ரா ஒரு திறமைசாலி. அவர் எந்த ஒரு சூழ்நிலையிலும் சிறப்பாக பந்துவீசக் கூடியவர். அவர் பந்துவீச்சில் அனைத்தையும் சரியாக செய்கிறார். அவர் உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்"என்று கூறியுள்ளார்.