Sports

'Release Imran Khan' : INDvsPAK போட்டியின்போது வானில் பறந்த விமானம்... வைரலாகும் வீடியோ !

பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் மீது, கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்தன. பல்வேறு எதிர்புகளுக்கு மத்தியில் அந்த தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இம்ரான் கான் பதவி விலகி எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தன. அந்த கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த ஷெபாஸ் ஷெரீப் பாகிஸ்தானில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . அவரின் அரசுக்கு பெரிய கட்சிகளில் ஒன்றான பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆதரவு அளித்தது

இம்ரான் கானுக்கு எதிராகவும் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தியது. இது குறித்த வழக்கில் இம்ரான் கான் குற்றவாளி என்று கூறிய நீதிமன்றம் அவரையும், அவரது மனைவி புஸ்ரா பீவியையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதன்படி இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய டி20 உலகக்கோப்பை போட்டியின்போது மைதானத்தின் மேல் 'Release Imran Khan' என்ற வாசகத்தை தாங்கியபடி பறந்த சிறிய அளவிலான விமானத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் இருநாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்படும் தருணத்தில் சிறிய அளவிலான விமானம் ஒன்று மைதானத்தின் மேல் 'Release Imran Khan' என்ற வாசகத்தை தாங்கியபடி பறந்துள்ளது. இதனை இம்ரான் கண் பிஐடி கட்சி தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

Also Read: 4 பணயக்கைதிகள் மீட்க 274 பாலஸ்தீனிய பொதுமக்களை கொன்ற இஸ்ரேல் : உலகநாடுகள் கண்டனம் !