Sports
T20 உலகக்கோப்பை : இன்று பாகிஸ்தானை சந்திக்கிறது இந்தியா : தோல்வியிலிருந்து மீளுமா பாகிஸ்தான் ?
நடப்பாண்டு இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியான இந்தியா - பாகிஸ்தான் மோதும் இன்று நியூயார்க்கில் உள்ள Nassau County சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
அமெரிக்க நேரப்படி, காலை 10.30 மணிக்கும், இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கும் போட்டி தொடங்குகிறது. போட்டி அரங்கேறவுள்ள நியூயார்க் நகரில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் Housefull போர்டு வைக்கப்பட்டுள்ளது. போட்டிக்கான டிக்கெட் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் திண்டாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. .
போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நியூயார்க் சிட்டியில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதே மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடக்க போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்திற்கு எதிரான ஆட்டத்தில் காயத்துடன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆன ரோஹித் சர்மா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களம் காண்பாரா என்ற சந்தேகம் எழுந்த நிலையில், அவர் ஆடுவர் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
மறுபுறம், அமெரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் தோல்வியடைந்தால், இந்தியாவிற்கு எதிரான போட்டியில் எப்படியும் வென்றாக வேண்டிய நிர்பந்தத்தில் அந்த அணி உள்ளது. இந்தியாவிற்கு எதிராக வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை நினைத்து பார்க்க முடியும் என்பதால், இப்போட்டியில் வெற்றி பெற அந்த அணி கடுமையாக போராடும் என கருதப்படுகிறது.
இதுவரை டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை ஏழு முறை நேருக்கு நேர் மோதியுள்ளதில், ஆறு போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன. போட்டி நடைபெறும் Nassau County சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இந்தியா . பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஒரு மாதத்திற்கு முன்பாகவே விற்றுத் தீர்ந்து விட்டன.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் பல லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடியே அமெரிக்க மண்ணில் வரலாற்று வெற்றியை பதிவு செய்ய இரு அணிகளும் காத்துள்ள நிலையில், வெற்றியை பதிவு செய்ய போவது யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!