Sports

எழுச்சி பெரும் சிறிய அணிகள்... திணறும் ஜாம்பவான் அணிகள்... விறுவிறுப்பாகும் T20 உலகக்கோப்பை தொடர் !

20 அணிகள் கலந்துகொள்ளும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பின்றி சென்ற இந்த உலகக்கோப்பை தொடரின் போட்டிகள் தற்போது விறுவிறுப்படைந்துள்ளது.

இதற்க்கு சிறிய அணிகள் கூட பெரிய அணிகளுக்கு கடும் போட்டியை அளிப்பதும், அவற்றை வீழ்த்தும் அளவு திறமையாக இருப்பதுமே காரணமாக அமைந்துள்ளது. இதனால் முக்கிய போட்டிகள் தவிர்த்து சிறிய அணிகளுடனான போட்டிகள் கூட பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலககோப்பையில் முதல் முறையாக கலந்துகொண்ட பப்புவா நியூ கினியா அணி முன்னாள் சாம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியையே தோற்கடிக்கும் அளவு சிறப்பாக செயல்பட்டது. அதே போல உலககோப்பையில் முதல் முறையாக கலந்துகொண்ட உகாண்டா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

போட்டியை நடத்தும் கத்துக்குட்டி அணியான அமெரிக்கா முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவர் வரை கொண்டுசென்று வீழ்த்தியது. ஓமன் அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா அணிக்கு கடும் சவால் அளித்தது. அந்த வகையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வளர்ந்து வரும் அணியான ஆப்கானித்தான் அணி வலிமையான நியூஸிலாந்து அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

இன்று நடைபெற்ற இலங்கை - வங்கதேச அணிகள் மோதிய போட்டி குறைந்த ரன்களை கொண்ட போட்டியாக இருந்தாலும் இறுதிவரை பரபரப்பாக சென்றது. இதன் காரணமாக வரவிருக்கும் போட்டிகளுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் சுனில் சேத்திரி : பிரியாவிடை அளித்த ரசிகர்கள் !