Sports

ரசிகர்களின்றி நடக்கும் T20 உலகக்கோப்பை போட்டிகள் : இந்தியாவும் ICC-யும்தான் இதற்கு காரணமா ?

20 அணிகள் கலந்துகொள்ளும் லகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் போட்டியை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது சொந்த மண்ணில் பப்புவா நியூ குனியா அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் 19-வது ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றது. ஆனால், சொந்த மண்ணில் ஆடிய முதல் போட்டியிலேயே மைதானத்தில் போதிய ரசிகர்கள் இல்லாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஐசிசி-க்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது .

அதே நேரம் இந்த நிலைமைக்கு ஐசிசியே காரணம் என விமர்சனம் எழுந்துள்ளது. பொதுவாக டி20 போட்டிகள் மாலை தொடங்கி இரவு நேரத்தில் நடைபெறும். வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 லீக் போட்டிகள் இரவு நேரத்தில் நடந்த நிலையில், அந்த போட்டிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் வருகை தந்திருந்தனர்.

ஆனால் தற்போது நடைபெறும் போட்டிகள் அந்த நாட்டின் நேரப்படி காலை 10:30க்கு நடைபெற்றது. இதற்கு முக்கிய காரணமாக ஒளிபரப்பு உரிமையே காரணமாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை தெற்காசிய நாடுகளை சேர்ந்த ரசிகர்களே அதிகம் பார்ப்பார்கள்.

அதனால் அவர்களுக்காக காலை 6 மணிக்கு சில போட்டிகளும், இரவு 8 மணிக்கு சில போட்டிகளும் நடைபெறும் வகையில் அட்டவணையை தயார் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த உலகக்கோப்பைக்காக டிக்கெட் விலையையும் ஐசிசி அதிகரித்துள்ளதும் ரசிகர்கள் வருகை தராததற்கு காரணமாக கூறப்படுகிறது.

Also Read: "நாளை இந்தியா கூட்டணியின் வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !