Sports

INDvsPAK போட்டிக்கு சிக்ஸர் தூரம் 60 மீட்டர் மட்டுமே : சர்ச்சையில் சிக்கிய ICC !

20 அணிகள் கலந்துகொள்ளும் லகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெறவுள்ளது. இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறுகிறது.ஜூன் 5ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நியூயார்க் நகரில் வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த மைதானம் 34 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் இரண்டே மாதங்களில் உருவாக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மைதானத்தின் பவுண்டரி எல்லைகள் குறைவாக இருப்பது தற்போது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகரில் உள்ள இந்த மைதானத்தில் 60 முதல் 65 மீட்டர் தூரம் மட்டுமே பவுண்டரி எல்லைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் , ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டுவரப்படும் பிட்ச் ஆடுகளத்தில் பயன்படுத்தப்படவுள்ளதால் ஆரம்ப கட்ட போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கிரிக்கெட்டை அமெரிக்காவில் பிரபலப்படுத்தும் வகையில் இந்த தொடர் அங்கு நடத்தப்படுவதால் இது போல பேட்டிங்க்கு சாதகமாக மைதானம் அமைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

Also Read: காங்கிரஸ் வெல்லும்போதெல்லாம் பொய்க்கும் கருத்துக்கணிப்புகள் - வரலாறு சொல்வது என்ன?