Sports

"ரிஷப் பண்ட் பேட்டிங் பற்றி இனி யாருக்கும் கவலையிருக்காது" - ரிக்கி பாண்டிங் கருத்து !

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம் வீரர் ரிஷப் பண்ட் இந்திய அணியில் விக்கெட் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த ரிஷப், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவர் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார். அங்கு முழங்காலில் பாதிக்கப்பட்டுள்ள தசைநார் கிழிப்பிற்கும் 'ஆப்பரேஷன்' செய்யப்பட்டது.அதன் பின்னர் காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு குறைந்த அளவு பயிற்சிகளில் ரிஷப் பண்ட் பங்கேற்றார்.

தொடர்ந்து ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான உடற்தகுதியை பெற்று விட்டார் என பிசிசிஐ அறிவித்தது. அதன்படி சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் காரணமாக டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், இந்திய அணிக்காக ரிஷப் பண்ட் மீண்டும் விளையாட இருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என டெல்லி அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " ரிஷப் பண்ட் திரும்பிவந்தது மிகப்பெரிய கம்பேக். அவர் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்.

அவருடன் இணைந்து பணிபுரிந்த தருணத்தை நான் ரசித்தேன். இப்போது அவரின் பேட்டிங் பற்றி யாருக்கும் கவலையில்லை. ஏனெனில் அவர் எவ்வளவு நன்றாக ஆடுகிறார் என்பதும் அவரது பேட்டிங் திறன் என்ன என்பதும் அனைவருக்குமே தெரியும்" என்று கூறியுள்ளார்.

Also Read: "ரோஹித் சர்மா கூறியது எனக்கு ஆறுதல் அளித்தது"- இந்திய அணியில் தேர்வாகாதது குறித்து ரிங்கு சிங் கருத்து !