Sports
"ஒவ்வொரு நாளும் இதற்காக வருத்தப்படுவேன்"- சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் சுனில் சேத்திரி !
உலக அளவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் கால்பந்தை மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ ஆண்டு வருகின்றனர். இதன் காரணமாக உலகெங்கும் இவ்ர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கிளப் மற்றும் நாட்டுக்காக ஏராளமான கோல்களை குவித்துள்ள இவர்கள் சாம்பியன் வீரர்களாக கொண்டாடப்படுகிறார்கள்.
இது தவிர இந்தியாவிலும் இவர்களுக்கு பெரும் அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு மாற்றாக தற்போது இந்திய கால்பந்து ரசிகர்கள் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்திரியின் பெயரை உச்சரித்து வருகின்றனர். அதிலும் சமீப காலமாக இவர் செய்துள்ள சாதனைகளால் இவர் உலகளவில் கொண்டாடப்படும் வீரராகவும் மாறியுள்ளார்.
சர்வதேச அளவில் நாட்டுக்காக அதிக கோல் அடித்த நடப்பு வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ மற்றும் மெஸ்ஸிக்கு அடுத்த இடத்தில் சுனில் சேத்திரி இருக்கிறார். மேலும், அவர் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் இன்டர்கான்டினென்டல் கோப்பை மற்றும் தெற்காசிய கோப்பையை வென்று அசத்தியது.
இந்த நிலையில், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுனில் சேத்திரி கூறியுள்ளார். இது குறித்துப் வீடியோ வெளியிட்டுள்ள அவர், "எனது மனைவியிடம், இனி நாட்டுக்காக எந்த போட்டியிலும் விளையாடப் போவதில்லை என்று கூறினேன். அப்போது என் மனைவி கண்ணீர் சிந்தினார். ஏன் கண்ணீர் வந்தது என்று அவர்களுக்கே தெரியவில்லை.
எனது கடைசி போட்டியில் விளையாட போகிறேன் என்று முடிவு செய்த பின், எனது குடும்பத்தினரிடம் தான் முதலில் பகிர்ந்து கொண்டேன். இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக நீண்ட ஆலோசனை எனக்குள் செய்து கொண்டேன். அதன்பின்னரே ஓய்வு முடிவுக்கு வந்தேன். இந்த முடிவுக்காக சோகமடைவேனா என்றால், நிச்சயம் சோகமடைவேன். ஒவ்வொரு நாளும் இதற்காக வருத்தப்படுவேன்" என்று கூறியுள்ளார்.
இந்திய அணிக்காக 150 போட்டிகளில் விளையாடியுள்ள சுனில் சேத்ரி, மொத்தமாக 94 கோல்களை அடித்துள்ளார். அமெரிக்காவின் கான்சாஸ் சிட்டி விசார்ட்ஸ், போர்ச்சுகல் ஸ்போர்ட்டிங் சிபி ரிசர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காகவும், இந்தியாவில் மோகுன் பகான், ஈஸ்ட் பெங்கால், பெண்டோ, மும்பை சிட்டி எஃப்.சி, பெங்களூரு எஃப்.சி உள்ளிட்ட அணிகளுக்காகவும் அவர் ஆடியுள்ளார்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!