Sports
ஷர்துல் தாகூரின் கோரிக்கையை ஏற்ற BCCI : தேர்வு குழுவினருக்கு கூடுதல் பொறுப்புகள் அளிக்க முடிவு !
டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.
ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், ரஞ்சி கோப்பை போட்டிக்கான முக்கியத்துவத்தை பிசிசிஐ குறைத்து வருவதாகவும் விமரிசனங்கள் எழுந்து வருகிறது.
அதுமட்டுமின்றி ரஞ்சி கோப்பைக்கு இடையே இரண்டு நாட்கள்தான் இடைவேளை இருப்பதாகவும், இப்படி இடைவேளை இல்லாமல் தொடர்ந்து ஆடினால் வீரர்கள் காயத்தை சந்திப்பார்கள் எனவும் விமர்சனம் எழுந்தது. அதிலும் இந்திய அணி வீரர் வீரர் ஷர்துல் தாகூர் வெளிப்படையாக இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அனைத்து உள்நாட்டு தொடர்களுக்கும் போதிய இடைவெளி அளிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், ரஞ்சி கோப்பை, சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே டிராபி, துலீப் டிராபி, இரானி கோப்பை ஆகிய போட்டிகளுக்கு போதிய இடைவேளை விட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, துலீப் கோப்பைக்கான அணிகளை அந்தந்த மண்டல அணி தேர்வாளர்களே இதுவரை அறிவித்து வந்தனர். இனி தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம் போன்ற அணிகளை தேர்வு செய்யும் உரிமை தேசிய தேர்வு குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒருநாள் மற்றும் டி20 என மண்டல அணி வீரர்களை தேசிய தேர்வு குழுவினரே தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!