Sports

"சிரித்துக்கொண்டே முட்டாள்தனத்தை மீண்டும் மீண்டும் செய்யவேண்டாம்" ஹர்திக் பாண்டியாவை விமர்சித்த ஸ்டெயின்

நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளம்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.

அதன் பின்னர் நடைபெற்ற போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் விமர்சித்த வண்ணம் உள்ளனர். ஆனால், ரசிகர்களின் இந்த செயலுக்கு ஹர்திக் பாண்டியா எந்த எதிர்வினையையும் ஆற்றாமல் உள்ளார். அதோடு பெரும்பாலான நேரங்களில் சிரித்த முகத்துடன் வளம் வருகிறார்.

இந்த நிலையில், தோல்வியை சிரித்துக் கொண்டே அந்த முட்டாள்தனத்தை மீண்டும் மீண்டும் செய்கிறோம் என ஹர்திக் பாண்டியாவை தென்னாபிரிக்க முன்னாள் வீரர் ஸ்டெய்ன் விமர்சித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், வீரர்கள் உண்மையாக தங்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதை நேர்மையாக சொல்லவேண்டும். அந்தத் நாளை நான் எதிர்பார்க்கிறேன்.

அதை விட்டுவிட்டு வழக்கமான பாதுகாப்பான விஷயத்தை சொல்லி நம்மையும், மனதையும், ஊமையாக்கி அடுத்த ஆட்டத்தில் தோற்றுவிட்டு சிரித்துக் கொண்டே அந்த முட்டாள்தனத்தை (நான்சென்ஸ்) மீண்டும் மீண்டும் செய்கிறோம்"என்று விமர்சித்துள்ளார்.

Also Read: "ஏழை நாடுகளுக்கு சென்று விளையாடமுடியாது" - சேவாக்கின் கருத்தால் சர்ச்சை... முழு விவரம் என்ன ?