Sports
"ரிங்கு சிங்குவை தேர்வுக்குழுவினர் மறந்திருக்க மாட்டார்கள் என நம்புகிறேன்" - சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து !
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணி கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியை சந்தித்தது. இந்த போட்டியில் கொல்கத்தா நையிட் ரைடர்ஸ் அணியின் வெற்றிக்கு இறுதி 8 பந்தில் அணியின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது.
அப்போது19-வது ஓவரின் இறுதி இரண்டு பந்துகளில் 6,4 என ரிங்கு சிங் விளாசினார். இதனால் இறுதி ஓவரில் 29 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. யாஷ் தயாள் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தை உமேஷ் யாதவ் 1 ரன் எடுக்க 5 பந்தில் 28 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அடுத்த 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார்.
அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.
இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அதன் பின்னர் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். ஆனால் அடுத்து மேற்கிந்திய தீவுகள், அமெரிக்காவில் நடைபெறும் உலகக்கோப்பை டி20 தொடரில் மைதானங்கள் மெதுவானது என்பதாலும், அத்தகைய மைதானங்களில் ரிங்கு சிங்கு திணறுவார் என்பதாலும் உலகக்கோப்பைக்கான அணியில் ரிங்கு சிங்குக்கு இடம் வழங்கப்படாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், ரிங்கு சிங் நேரடியாக உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணிக்குள் வருவதற்கு தகுதியானவர் என முன்னாள் இந்திய அணி வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்திய அணியிலும் சரி, ஐபிஎல் அணியிலும் சரி ரிங்கு சிங்குக்கு அதிக வாய்ப்பு கிடைப்பதில்லை. ஆனால் அதற்காக ரிங்கு சிங்கை தேர்வுக் குழுவினர் மறந்து விட மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்.
ரிங்கு சிங் தமக்கு கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பிலும் தன்னை நிரூபித்துள்ளார். அவர் எந்தளவுக்கு தொடர்ந்து நன்றாக விளையாடினார் என்பதை அனைவரும் பார்த்துள்ளோம். எனவே அவர் நேரடியாக இந்திய அணிக்குள் வருவதற்கு தகுதியானவர். அவரை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வு செய்யவேண்டும்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!