Sports
"ஹர்திக் பாண்டியா செயலில் எந்த தவறும் இல்லை" - முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி ஆதரவு !
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்ற முறையில் குஜராத் அணியின் வெற்றிகரமான கேப்டனாக வளன்வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு செல்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், மும்பை அணிக்கு வந்ததும் கேப்டனாக்கப்பட்டதால் அந்த அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, சூரியகுமார், பும்ரா ஆகியோர் ஹர்தீக் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரசிகர்களும் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற குஜராத் - மும்பை அணிகளுக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கிண்டல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போட்டி தொடங்கும் நேரத்தில், ஒலிபெருக்கியில் ஹர்திக் பாண்டியாவின் பெயர் அறிவிக்கப்பட்டபோது ரசிகர்கள் பூ என கிண்டல் செய்யும் விதமாக கோஷமெழுப்பினர்.
அப்போது இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி ஹர்திக் பாண்டியா மும்பைக்கு வரும்போது இன்னும் அதிகமாக கிண்டல் செய்யப்படுவார் என கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடேவில் நடைபெற்ற போட்டியில் சொந்த அணியின் ரசிகர்களாலேயே ஹர்திக் பாண்டியா கிண்டலுக்கு உள்ளாகினார்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா செயலில் எந்த தவறும் இல்லை என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "மைதானங்களில் ரசிகர்கள் ஹர்திக்கிற்கு எதிராக அதிருப்தி குரலை எழுப்பி வருகின்றனர். இந்த செயல் நிறுத்தப்படவேண்டும். ரசிகர்கள் இவ்வாறு செய்வது தவறானது.
மும்பை அணி நிர்வாகம்தான் ஹர்திக்கை கேப்டனாக நியமித்திருக்கிறது. நீங்கள் இந்திய அணிக்காக ஆடினாலும் சரி, ஐபி.ல் அணிக்காக ஆடினாலும் சரி ஒரு நிர்வாகம்தான் உங்களை கேப்டனாக நியமிக்கும்.விளையாட்டுகளில் இப்படியெல்லாம் நடக்கத்தான் செய்யும். ஒரு வீரராகவும் கேப்டனாகவும் மும்பை அணிக்காகவும் , இந்திய அணிக்காகவும் ரோஹித் சர்மாவின் செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்திருக்கிறது. அதற்காக ஹர்திக் பாண்டியா மீது அதிருப்தி ஒலியை எழுப்ப முடியாது. இது அவருடைய தவறு கிடையாது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!