Sports
நான் செய்த பெரிய தவறு இதுதான், MI,CSK அணி குறித்து மட்டுமே வருந்துகிறேன்- தினேஷ் கார்த்திக் கூறியது என்ன?
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அணியில் இடம்பெறாத காரணத்தால் வர்ணனையாளராக செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது.
ஆனால் கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக பினிஷராக செயல்பட்டு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த டி 20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றார்.
ஆனால், அதன்பின்னர் அவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டது, எனினும் விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்ற அவர், தற்போது நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் இடம்பிடித் ஆடி வருகிறார். இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாதது வருத்தமளிப்பதாக தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்து சக வீரர் அஸ்வினிடம் யூடியூபில் பேசிய அவர், " நான் வாழ்வில் 2 விஷயங்களுக்காக மட்டும் இப்போதும் வருந்துகிறேன். அதில் ஒன்று மும்பை இந்தியன்ஸ் அணி கொடுத்த ஆஃபரை வேண்டாமென்று துறந்து வெளியில் வந்ததுதான். 2013ஆம் ஆண்டு மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போது, மும்பை அணியில் நம்பர் 3 வீரராக விளையாடினேன். மெகா ஏலத்திற்கு முன்பாக மும்பை அணி நிர்வாகம் என்னை தக்க வைக்க விரும்பியது. ஆனால், நான் அங்கிருந்து வெளியே வந்தேன். மும்பை அணி ஒருநாள் பயிற்சிக்கு பந்திற்காக மட்டும் ரூ.4 லட்சம் வரை செலவு செய்ய தயங்க மாட்டார்கள். அங்கு இருந்திருந்தால் எனது கிரிக்கெட் பாதையும் முன்னேற்றம் கண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால், அதனை தவறவிட்டேன்.
மற்றொரு விஷயம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட முடியாததுதான். சென்னை அணி நிர்வாகம் ஒவ்வொரு முறையும் என்னை ஏலத்தில் வாங்க முயற்சிப்பார்கள். அதற்காக என்றும் மரியாதை இருக்கிறது. 2008-ல் விபி சந்திரசேகர் சென்னை அணிக்காக என்னை வாங்குவார் என்று நம்பியிருந்தேன். அவர்தான் தமிழ்நாடு, இந்தியா ஏ அணிகளுக்கு என்னை தேர்வு செய்திருந்தார்.ஆனால் ஏலத்தின் போது சிஎஸ்கே அணி தோனியை வாங்கிய போது, தான் ஐபிஎல் தொடரை புரிந்து கொள்ள முடிந்தது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!