Sports

ஜாம்பவான்களின் சாதனைகளை உடைத்த சாய் சுதர்சன் : IPL தொடரில் சாதனை படைத்த தமிழ்நாட்டின் இளம் வீரர் !

உள்நாட்டு தொடர்களில் கலக்கி வந்த தமிழக வீரர் சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குஜராத் அணியில் இடம்பிடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் 43 ரன்கள் குவித்து ரிடையர்ட் கட் முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் இறுதிப்போட்டியில் 47 பந்துகளில் 6 சிக்சர், 8 பவுண்டரிகள் என 96 ரன்கள் விளாசி இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். ஆட்டமிழந்து ஓய்வறைக்கு சென்ற அவருக்கு குஜராத் வீரர்கள் அனைவரும் எழுந்து நின்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதன் காரணமாக அவருக்கு இலங்கையின் கொழும்பு நகரில் ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 5 ஏ அணிகள் பங்கேற்ற எமர்ஜிங் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய ஏ அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் சிறப்பாக செயல்பட்ட சாய் சுதர்சன் தொடர்ந்து உள்ளுர் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

இதனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் வாய்ப்பு வழஙகப்பட்டது. அதிலும் சிறப்பாக செயல்பட்டு ஆட்டநாயகன் விருதினை வென்றார். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் ஜாம்பவான்களை முந்தி சாதனை படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில் 17 இன்னிங்ஸ் முடிவில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து சாய் சுதர்சன் அசத்தியுள்ளார்.

611 ரன்களுடன் சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்திருந்த நிலையில், அவரை விஞ்சி, 667 ரன்கள் குவித்து சாய் சுதர்சன் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் கவுதம் கம்பீர், நான்காவது இடத்தில் திலக் வர்மா, ஐந்தாவது இடத்தில் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் முதல் 17 இன்னிங்ஸ்களில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்கள் :

667 ரன்கள் - சாய் சுதர்சன்

611 ரன்கள் - ருதுராஜ் கெய்க்வாட்

565 ரன்கள் - கௌதம் கம்பீர்

540 ரன்கள் - திலக் வர்மா

530 ரன்கள் - ரோஹித் சர்மா

509 ரன்கள் - தேவ்தத் படிக்கல்

505 ரன்கள் - ராகுல் டிராவிட்

Also Read: அடுத்த ஆண்டு முக்கிய IPL அணிக்கு தலைமை தாங்கவுள்ளாரா ரோகித் சர்மா ? - ட்ரெண்டாகும் வீடியோ !