Sports
"ருத்துராஜிடம் சென்னை அணி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்"- முன்னாள் இந்திய அணி வீரர் கருத்து !
நடப்பாண்டு ஐ.பி.எல் தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியனான சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்தியது. இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டார்.
கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் சென்னை அணிக்கு தோனி தலைமை தாங்கி நிலையில் தற்போது ருதுராஜ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி கோப்பை தொடர் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் செயல்பட்டு வரும் நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி தங்கப்பதக்கம் வேண்டு கொடுத்தார். இதன் காரணமாக அவர் சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜாம்பவான் தோனியின் இடத்தில சென்னை அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். பெங்களூரு அணிக்கு எதிரான முதல் போட்டியிலும் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக செயல்பட்டார். இந்த நிலையில், ருதுராஜிடம் சென்னை அணி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம் என முன்னாள் இந்திய வீரர் லட்சுமிபதி பாலாஜி கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "சென்னை அணிக்கு கேப்டனாக ருதுராஜ் கொண்டுவரப்பட்டது சரியான முடிவு . கடைசியாக அவர் தலைமையில் இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது. அவர் 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்றார். எனவே அவரை சீசனின் ஆரம்பத்திலேயே கேப்டனாக கொண்டு வந்தது சரியானது.
இங்கிருந்து ருத்ராஜுக்கு சென்னை அணியில் நல்ல இடம் கொடுக்கப்படும். ஆனால் தோனி உருவாக்கிய நீண்ட பாரம்பரியத்தை யாராலும் ஈடு செய்ய முடியாது . இந்த வகையில் ருதுராஜ் இடம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். மேலும் தோனிவுடனும் ஒப்பிட வேண்டாம். அவர் இங்கிருந்து வளர்ந்து அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லட்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?