Sports
"ஈ சாலா கப் நம்து": முடிவுக்கு வந்த 16 ஆண்டு ஏக்கம்... முதல்முறை கோப்பையை வென்ற RCB- கொண்டாடும் ரசிகர்கள்
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
இதன் வெற்றியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மகளிருக்கான ஐபிஎல் தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என 5 அணிகள் இந்த தொடரில் களமிறங்கின.
இதில் கடந்த ஆண்டு நடந்த முதல் மகளிர் ஐபிஎல் தொடரில் மும்மை இந்தியன்ஸ் அணி வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் முன்னேறின.
இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் டெல்லி அணி 18.3 ஓவர்களில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக ஷபாலி வர்மா 42 ரன்கள் எடுத்தார். பெங்களூரு சார்பில் ஸ்ரேயங்கா படேல் 4, சோபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். பின்னர் ஆடிய பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இறுதியில், 19.3 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்து அபார வெற்றிபெற்று கோப்பையை கைப்பற்றியது. பெங்களுரு அணியில் கேப்டன் மந்தனா 31, சோபி டேவின் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். எலிஸ் பெரி 35 ரன்களும், ரிச்சா கோஸ் 17 ரன்களும் குவித்து இறுதிவரை களத்தில் இருந்தனர்.
இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. ஆண்கள் ஐபிஎல் தொடரில் 16 ஆண்டுகள் ஆடும் பெங்களூரு அணி ஒரு முறை கூட கோப்பையை வெல்லாமல் இருக்கும் நிலையில், மகளிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்றுள்ளதை RCB ரசிகர்கள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?