Sports
அரசியல்வாதியின் மகனை திட்டியதால் கேப்டன் பதவி பறிப்பு- இனி ஆந்திர அணிக்காக ஆடமாட்டேன் என அறிவித்த விஹாரி!
ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை இந்திய அணிக்கு தேர்வாகும் முக்கியத் தொடராக இருந்தது. ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறித்து. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது.
அந்த வகையில் ரஞ்சி கோப்பையில் பல ஆண்டுகள் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம்பெற்றவர் ஹனுமா விஹாரி. இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் நீண்ட காலம் வளம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த சூழலில் தற்போது நடைபெற்றுவரும் ரஞ்சி கோப்பையில் ஆந்திர பிரதேச அணிக்கு தலைமை தாங்கி வருகிறார். இந்த தொடரின் காலிறுதிப் போட்டியில் ஆந்திர பிரதேச அணி மத்திய பிரதேச அணியிடம் 4 ரன்கள் வித்தியாத்தில் தோல்வியைத் தழுவியது.
நாங்கள் கடைசி வரை கடுமையாக போராடினோம் ஆனால் அது நடக்கவில்லை. ஆந்திராவுடனான மற்றொரு காலாண்டில் தோல்வியடைந்தது. அதனைத் தொடர்ந்து ஹனுமா விஹாரி பதிவிட்ட பதிவு கிரிக்கெட் உலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஹனுமா விஹாரியின் பதிவில், "இந்தப் பதிவு நான் முன்வைக்க விரும்பும் சில உண்மைகளைப் பற்றியது. பெங்கால் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் நான் கேப்டனாக இருந்தேன். அந்த ஆட்டத்தின் போது நான் அணி வீரர் ஒருவரை திட்டினேன். அவரின் அப்பா ஒரு அரசியல்வாதி என்பதால், அவர் தனது அப்பாவிடம் இதுகுறித்து புகார் செய்தார். பதிலுக்கு அவரது அப்பா என் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆந்திர மாநில கிரிக்கெட் சங்கத்திடம் கூறியுள்ளார்.
அதன் பின்னர் வங்காள அணிக்கு எதிராக நாங்கள் வெற்றி பெற்ற நிலையில், என் மீது தவறு ஏதும் இல்லாத சூழலில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டேன். கடந்த 7 ஆண்டுகளில் 5 முறை ஆந்திர அணியை நாக்-அவுட் சுற்றுக்கு அழைத்து சென்ற, கடந்த சீசனில் எலும்பு முறிவு ஏற்பட்ட போதும் களத்தில் அணிக்காக இடது கையால் பேட் செய்த வீரரை விட அந்த வீரர் தான் முக்கியம் என கருதி உள்ளது. எனது சுயத்தை இழந்து நான் ஆந்திர அணியில் விளையாட விரும்பவில்லை. இனி அந்த அணிக்காக எந்த போட்டியிலும் ஆட மாட்டேன்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!