Sports

BCCI-யை ஏமாற்றிய ஷ்ரேயாஸ் : IPL-ல் ஆட இப்படியா செய்வது ? NCA கடிதத்தால் சிக்கியது எப்படி ?

டெஸ்ட் போட்டிதான் சிறந்த வீரர்களை உருவாக்குகிறது என்று நிபுணர்கள் அடிக்கடி சொல்வார்கள். அதற்கு உதாரணமாக தொடர்ந்து 4 நாள் ஆடப்படும் ரஞ்சி கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் வீரர்கள் இந்திய அணியில் தூண்களாக பல ஆடுகள் நீடிக்கிறார்கள். இப்போது இந்திய அணியில் ஜாம்பவான்கள் என்று சொல்லப்படும் அனைவரும் ரஞ்சி கோப்பை உருவாக்கிய நாயகர்கள்தான்.

ஆனால், இந்த காலத்தில் ஐபிஎல் வந்ததால் ரஞ்சி கோப்பை தொடர் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும், இந்திய அணியில் ஆடும் நட்சத்திர வீரர்களும் ரஞ்சி கோப்பையில் ஆடாமல் புறக்கணித்தனர். சமீப காலத்தில் இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது .

அதனைத் தொடர்ந்து காயம் அடைந்த வீரர்களை தவிர அனைவரும் ரஞ்சி அணியில் ஆடவேண்டும் என்று பிசிசிஐ அதிரடி உத்தரவிட்டது. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் விலகினார்.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடெமியின் மருத்துவ பிரிவு தலைவர் நிதின் படேல் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியுள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில், "ஸ்ரேயாஸ் ஐயர் முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு உடல்நிலை சரியாக உள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வரும் ஐபிஎல் தொடரில் விளையாட தயாராடும் வகையிலேயே முதுகு பிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் விளையாடாமல் தவிர்த்துள்ளார் என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதனால் பிசிசிஐ-யை ஏமாற்றிய காரணத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: "சதம் அடித்தும் என்னை அணியில் ஏன் நீக்கினார் என தோனியிடம் கேட்கவிரும்புகிறேன்" - மனோஜ் திவாரி கருத்து !