Sports
"நான் ஒன்றும் கண் தெரியாதவன் அல்ல" - இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் காட்டம் !
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், அடுத்த போட்டியில் இந்தியா வென்று தொடரை 1-1 என சமன் செய்தது.
தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 434 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் அடைந்த தோல்வி இங்கிலாந்து சமீபத்திய காலத்தில் அடைந்த மிகப்பெரிய தோல்வியாக பார்க்கப்படுகிறது.
அதோடு இந்த மூன்று போட்டிகளிலும் இங்கிலாந்து நட்சத்திர வீரர் பார்ஸ்டோ மிக மோசமான பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்த வருகிறார். இதன் காரணமாக அவர் மேல் கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரை அணியில் இருந்து நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஜானி பார்ஸ்டோ விவகாரத்தில் நான் ஒன்றும் கண் தெரியாதவன் அல்ல என்று இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "ஜானி பார்ஸ்டோ அணிக்காக நிறைய செய்துள்ளார். அவர் யாருக்கு எதிராகவும், எந்த சூழலிலும் மிகச்சிறப்பாக ஆடுபவர் என்பது எங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை பார்க்காத அளவு நான் ஒன்றும் கண் தெரியாதவன் அல்ல.
இருந்தாலும், அவருக்கு தற்போது ஆதரவு கொடுத்து தன்னம்பிக்கை அளிக்க வேண்டும். அவர் எதை அடைய முயற்சிக்கிறார் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஜானி மீண்டும் நல்ல நிலைக்கு வருவார் என்பது உறுதி. ஜானி பார்ஸ்டோவுடன் சிறிது நேரம் செலவழித்து பேசினேன். அவரிடம் அவர் ஒரு தலைசிறந்த வீரர் என்பதை நினைவூட்டினேன்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!