Sports

பல வருடங்களாக நீடிக்கும் பந்தம்... CSK தோனியை ஒப்பந்தம் செய்து 16 வருடங்கள் நிறைவு- கொண்டாடும் ரசிகர்கள்!

இந்திய அணி 1983-ம் வருடம் முதல் முறையாக கிரிக்கெட் உலககோப்பையை வென்றது. அதன் பின்னர் பல வருடங்களாக உலககோப்பையையே வெல்லாத நிலையில், இந்திய அணிக்கு கேப்டனாகி முதல் டி20 உலகக்கோப்பை தொடரிலேயே இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தார் எம்.எஸ்.தோனி.

அதன்பின்னர் 2011 உலககோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை என தோனிகேப்டனாக இருந்து மூன்று விதமான உலகக் கோப்பை வென்று இந்திய அணியின் கிரிக்கெட் வரலாற்றில் சரித்த சாதனையைப் படைத்தது. மேலும், மைதானத்தில் எந்தவித ஆக்ரோஷத்தையும் காட்டாமல் களத்தில் தனது பேட்டால் பதிலடி கொடுப்பார். இதனாலேயே இவரை இந்திய ரசிகர்களைத் தாண்டி உலகம் முழுவதும் ரசிகர்களை சம்பாதித்தார்.

அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார். ஐபிஎல் தொடர் தொடங்கியபோது இளம் வீரரான இருந்த தோனியின் மீது நம்பிக்கை வைத்து, அப்போதைய நட்சத்திரங்களை தவிர்த்து தோனியை சி.எஸ்.கே அணி ஏலத்தில் எடுத்தது.

முதலாவது ஐபிஎல் தொடரில் அதிக ஏலம் போன வீரராகவும் தோனியே இருந்தார். அதன் பின்னர் அணி நிர்வாகம் தோனிக்கு முழு சுதந்திரம் வழங்கிய நிலையில், சி.எஸ்.கே அணியை ஐபிஎல் வரலாற்றிலேயே சிறந்த அணியாக தோனி உருவாக்கி காட்டியுள்ளார். அதை தாண்டி சென்னை தோனியின் இரண்டாவது தாய் வீடு என்று சொல்லும் அளவு அவரை கொண்டாடியது.

சென்னை தனது இரண்டாவது தாய் வீடு என்று தோனியே பல முறை கூறியுள்ளார். அந்த அளவு சென்னை தோனியை கொண்டாடியது. இந்த நிலையில், தோனி சி.எஸ்.கே அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது 16 வருடங்கள் ஆகியுள்ளது. இந்த 16 வருடத்தில் பல்வேறு அணிகள் தங்கள் கேப்டனை மாற்றிய நிலையில், சி.எஸ்.கே அணிக்கு மட்டும் தோனியே தற்போது வரை செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ரஞ்சி கோப்பை : 6 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்கு முன்னேறிய தமிழ்நாடு - அசத்தும் இளம் வீரர்கள் !