Sports
இறுதியாக இந்திய அணியில் வாய்ப்பு - சர்ஃப்ராஸ் கானின் இந்திய அணி தொப்பியை முத்தமிட்டு நெகிழ்ந்த தந்தை!
ஐபிஎல் தொடருக்கு முன்னர் ரஞ்சி கோப்பையை இந்திய அணிக்கு தேர்வாகும் முக்கியத் தொடராக இருந்தது. ஆனால் ஐபிஎல் வந்தபின் அதில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கே அணியில் இடம் வழங்கப்படுகிறித்து. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக ஆடியவர்களுக்கு அணியில் இடம் மறுக்கப்படுகிறது.
அத்தகைய வாய்ப்பு மறுக்கப்படும் வீரர்தான் சர்ஃப்ராஸ் கான். மும்பை அணிக்கு ஆடி வரும் சர்ஃப்ராஸ் கான் ரஞ்சி தொடரில் ஒரு ஆண்டு மட்டும் அல்ல, கடந்த 3 தொடர்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 2019-20 ரஞ்சி தொடரில் அவரது ரன் சராசரி 154.7. 2021-22 ரஞ்சி தொடரில் அவரின் ரன் சராசரி 122.8. இது கிரிக்கெட்டின் ஜாம்பவான் டான் பிராட்மேனின் சராசரியை விட மிகஅதிகம். இது தவிர சர்ஃப்ராஸ் கானின் ஒட்டுமொத்த சராசரியே 82.83.
ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறாததற்கு அவரின் உடலின் எடை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. என்றாலும் தொடர்ந்து அடுத்தடுத்து 2 ரஞ்சி தொடர்களில் 900 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்று சிறப்பாக ஆட உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபித்து வருகிறார்.
ஆனாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் மறுக்கப்பட்ட நிலையில், தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டாம் டெஸ்ட் போட்டிக்கான 11 வீரர்கள் பட்டியலில் அவர் இடம்பெறாத நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கு இந்திய அணியின் தொப்பியினை முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வழங்கினார். இந்த நிகழ்வின் போது வை சர்ஃபராஸ் கானின் தந்தை கண்டுகளித்ததோடு, தனது மகனின் முதல் தொப்பியை தனது கைகளில் எடுத்து முத்தமிட்டார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!