Sports
"இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது"- இங். முன்னாள் வீரர் கருத்து !
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரஜத் படிதார் அறிமுகமானார். இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 396 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பின்னர் தனது முதல் இன்னிங்க்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 255 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.பின்னர் 399 ரன்களை இலக்காக கொண்டு ஆடிய இங்கிலாந்து அணி 292 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்த போட்டி வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக இங்கிலாந்து முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராட் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "இந்த தொடர் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. ஆனால் இந்த தொடரில் விராட் கோலி பங்கேற்காதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோலி ஒரு சிறந்த வீரர்தான். இருப்பினும் சில நேரங்களில் தனிப்பட்ட விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பது தவிர்க்கமுடியாதது. எனினும் இந்த தொடரில் இளம் வீரர்களுக்கு சிறப்பான ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி யாராவது ஒரு இளம் வீரர் தன்னை நிரூபித்துக் காட்ட முடியும்.BazBall அணுகுமுறை சிறப்பானதாக இருக்கிறது. இந்த அணுகுமுறையால் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கை அளிக்கிறோம்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?