Sports
“பாக். முன்னாள் வீரர்களைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்” - பும்ரா கூறியது என்ன ?
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது. மேலும், டெஸ்ட் போட்டிகளிலும் தனது சிறப்பான பங்களிப்பை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், ஜாகிர் கான் போன்ற ஜாம்பவான்களைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன் என பும்ரா கூறியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்று வென்றபின்னர் பேசிய பும்ரா, “ எனக்கு சாதனைகளை விட அணியின் வெற்றிதான் முக்கியம். இளம் வீரராக இருக்கும்போது வக்கார் யூனிஸ், வாசிம் அக்ரம், ஜாகிர் கான் போன்ற ஜாம்பவான்களைப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். தொலைக்காட்சியைப் பார்த்துதான் முதலில் நான் யார்க்கர் வீசக் கற்றுக்கொண்டேன்.
இங்கிலாந்து வீரை ஜேம்ஸ் ஆண்டர்சனை நான் எப்போதும் போட்டியாக நினைத்தது இல்லை. அவர் சிறந்த வீரர். நான் வளர்ந்து வருவதை ரோஹித் பார்த்திருக்கிறார். அவரைப் போன்றவர்கள் சிறப்பாக செயல்படுவதற்கு பாராட்டுகள். என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பதைப் பற்றி நாங்கள் உரையாடுவோம்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?