Sports
396 ரன்களுக்கு ஆல் - அவுட் : ஒற்றை ஆளாக இந்தியாவை கரைசேர்ந்த ஜெய்ஸ்வால்... இரட்டை சதம் விளாசி அசத்தல் !
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் இந்திய அணியில் ரஜத் படிதார் அறிமுகமானார். மேலும், குல்தீப் மற்றும் முகேஷ் குமாருக்கும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் களமிறங்க ரோகித் சர்மா 14, சுப்மன் கில் 34, ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்கள் என சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த அறிமுக வீரர் ரஜத் படிதார் 32 ரன்களுக்கும், அக்சர் படேல் 27 ரன்களுக்கும், ஸ்ரீகர் பரத் 17 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். எனினும் ஒருமுனையில் அபாரமாக ஆடிய துவக்க வீரர் ஜெய்ஸ்வால், 151 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர் இரட்டை சதம் விளாசினார். இறுதியில் ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 209 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிக்கட்டத்தில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விரைவு கதியில் ஆட்டமிழந்ததால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 396 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில், ஆண்டர்சன், சோயப் பஷீர், ரெஹான் அஹமத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?