Sports
"பாகிஸ்தான் அணிக்கு துணை கேப்டனே தேவையில்லை" - பாக். முன்னாள் வீரர் அப்ரிடி கருத்து !
2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்து. இறுதியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்து அரையிறுதிக்கு செல்லாமல் லீக் சுற்றோடு தொடரில் இருந்து வெளியேறியது.
இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமே காரணம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மேலும், கடந்த டி20 உலகக்கோப்பையிலும் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு விமர்சிக்கப்பட்டது. சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியால் இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறமுடியவில்லை.
இதன் காரணமாக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்தார். பின்னர் அவர் இடத்தில் டெஸ்ட் கேப்டனாக ஷான் மசூத், டி20 கேப்டனாக ஷாகின் அப்ரிடி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தற்போது நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் கேப்டனாக ஷாகின் அப்ரிடி கேப்டனாக செயல்பட்டார். ஆனால், அந்த தொடரில் 4-1 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணிக்கு ஒரே கேப்டனை நியமிக்க வேண்டும் என பாகிஸ்தான்அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் அணியின் இயக்குநராக உள்ள ஹஃபீஸ் மீது நம்பிக்கை இருக்கிறது. அவரை ஒரே தொடரை வைத்து அவரின் திறமையை முடிவு செய்யாதீர்கள். இது கேப்டன்களுக்கும் பொருந்தும். அவர்களுக்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை நேரம் கொடுக்கலாம்.
அதே நேரம் பாகிஸ்தான் அணிக்கு ஒரே கேப்டனை நியமிக்க வேண்டும். அணிக்கு துணை கேப்டன் பதவியே தேவையில்லை. துணை கேப்டனை நியமனம் செய்யவில்லை என்றாலே, கேப்டனாக இருப்பவர் கூடுதல் நம்பிக்கையுடன் இருப்பார்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!