Sports
பும்ரா என்னிடம் தொடர்ந்து கூறும் அறிவுரை இதுதான்- இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் கூறியது என்ன?
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ராவின் செயல்பாடு இந்திய அணிக்கு மிகமுக்கியமானதாக இருந்தது. இந்த நிலையில், நான் சிறப்பாக செயல்பட காரணம் பும்ராதான் என இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், ஜஸ்பிரித் பும்ரா எந்த தருணத்திலும் எனக்கு ஆலோசனை வழங்க தயாராக இருப்பார்."நான் சிறப்பாக செயல்பட அவரின் ஆலோசனைதான் காரணம். நான் நன்றாக யார்க்கர் பந்துகளை வீசுவதாகவும், அதனை தொடர்ந்து செய்யுமாறும் தொடர்ந்து அறிவுறுத்துவார். அவருடன் தொடர்ந்து உரையாடி வருகிறேன்.
மாநில அணிக்காக ஆடும்போது யார் அட்டாக் செய்வது, யார் மெய்டன் ஓவர் வீசி அழுத்தம் கொடுப்பது என்று சக வீரர்களோடு திட்டமிடுவோம், அதேதான் இந்திய அணியிலும் செய்கிறோம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் பும்ரா என்னிடம் தொடர்ந்து டாட் பால்களை வீசுமாறு அறிவுறுத்தினார். அதனை சரியாக செய்தேன் என நம்புகிறேன்"என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?