Sports
”தொடரில் இந்தியாவின் ஒரே தோல்வி கேப்டன் ரோகித் சர்மா மட்டுமே” - தினேஷ் கார்த்திக் கருத்தால் சர்ச்சை !
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றுவரும் நிலையில், அதன் முதல் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் குவிக்காமல் ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில், முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவா்களில் 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா ரன் ஏதும் குவிக்காமல் ஆட்டமிழந்தார்.
எனினும் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-சிவம் துபே இணைந்து அதிரடியாக ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது. ஜெய்ஸ்வால் 34 பந்துகளில் 68 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். எனினும் கடைசி வரை களத்தில் இருந்த சிவம் துபே 32 பந்துகளில் 63 ரன்களை விளாசி அணியை வெற்றிபெற வைத்தார்.
15.4 ஓவா்களிலேயே இந்திய அணி இலக்கை எட்டிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது. தொடரை கைப்பற்றிய இந்திய அணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்த தொடரில் இந்தியாவின் ஒரே தோல்வியாக கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார் என இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், “இந்த தொடரில் இந்திய அணி பேட்டிங், பெளலிங் என சிறப்பாக செயல்பட்டு தொடரை வென்றுள்ளது.
அதே நேரம் இந்த தொடரில் இந்திய அணியின் ஒரே தோல்வியாக கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். ஏனெனில் நீண்ட காலம் கழித்து டி20 கிரிக்கெட்டில் விளையாடும் அவர் அணியின் கேப்டனாக உள்ளார். ஆனால் முதல் போட்டியில் ரன் அவுட்டான அவர் இந்த போட்டியில் பெரிய ஷாட் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். ஆனாலும் அவர் அதைப்பற்றி பெரிய அளவில் கவலைப்படமாட்டார்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!