Sports
"தோனியிடம் கற்றதையே ஆட்டத்தில் செயல்படுத்தினேன்" - ஆட்டநாயகம் விருது வென்ற இளம்வீரர் கருத்து !
உலக அளவில் பிரபலமான கிரிக்கெட் தொடர் என்றால் அது இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடர்தான். ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கும் வரை சாதாரண கிரிக்கெட் அமைப்பாக இருந்த பிசிசிஐ இதன்பின்னர் பெரும் வலிமை வாய்ந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பாக மாறியது.
ஐபிஎல் தொடரின் வெற்றியைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை,வங்கதேசம் போன்ற பல்வேறு நாடுகளில் ஐபிஎல் பாணியில் கிரிக்கெட் தொடர்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அங்கும் அவை வணிக ரீதியாக வெற்றியை பெற்றுவருகின்றன.
பெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெற்ற தோனி தற்போது ஐ.பி.எல் தொடரில் மட்டும் சென்னை அணியை வழிநடத்தி வருகிறார்.
தோனி பல்வேறு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் அறிவுரை கூறுவதால் அவர்கள் விளையாட்டு திறன் அதிகரித்துள்ளதாக இளம்வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் ஆட்டநாயகன் விருது சென்ற சி.எஸ்.கே வீரர் சிவம் துபே ஆட்டத்தின் கடினமான சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று தோனி என்னிடம் கூறியிருக்கிறார் என்று கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " நான் பேட்டிங் செய்ய இறங்கிய போது, தோனியிடம் இருந்து நான் என்ன கற்றுக்கொண்டேனோ அதனை செயல்படுத்த விரும்பினேன். நான் தோனியிடம் தொடர்ந்து பேசுகிறேன். ஆட்டத்தின் கடினமான சூழ்நிலைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று என்னிடம் கூறியிருக்கிறார்.
தோனி எனக்கு இரண்டு, மூன்று முக்கிய குறிப்புகளை வழங்கினார். அவர் எனது பேட்டிங்கை மதிப்பிட்டால், நான் தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டே இருக்கிறேன். இதனால் எனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?