Sports
இவரை போல ஒருவர் கிடைத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே இருக்காது- இந்திய வீரரை புகழ்ந்த இர்பான் பதான்!
ஐபிஎல் மும்பை அணிக்காக அறிமுகமான பும்ரா அதன்பின்னர் தனது அபார செயல்பாடு காரணமாக இந்திய அணியின் இடம்பிடித்தார். அதோடு குறுகிய காலத்தில் இந்தியாவின் முதன்மை பந்துவீச்சளராகவும் உயர்ந்தார். முதலில் அவர் லீமிடெட் போட்டிகளுக்கு மட்டுமே தகுதியான வீரர் என கூறப்பட்ட நிலையில், டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கி அங்கும் தன்னால் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்தார்.
தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பும்ரா அடிக்கடி ஏற்படும் காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இறுதியாக கடந்த ஆண்டு தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடரின் போது காயமடைந்த பும்ரா பின்னர் உலகக்கோப்பை தொடருக்கு முன்னதாக அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
அந்த தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்ட அவர், அதில் சிறப்பாகவே செயல்பட்டார். தொடர்ந்து ஆசியக்கோப்பை, உலகக்கோப்பை என பும்ரா அபாரமாக செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து 15 மாதங்களுக்கு பின் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பினார். அந்த தொடரிலும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை வென்று அசத்தினார்.
இந்த நிலையில், பும்ராவை போல் ஒரு பவுலர் கிடைத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே இருக்காது என இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "காயத்தால் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பல மாதங்கள் விளையாடாமல் இருந்தார். அதன்பின்னர் விளையாட வந்த பின்னரும், அதிக பணம் கிடைக்கும் டி20 கிரிக்கெட்டுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார்.
இவரை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பெரிய தூதுவர் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு நாட்டுக்கும் பும்ராவை போல் ஒரு பவுலர் கிடைத்தால், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அழிவே இருக்காது. அவரின் உடல்மொழிக்கு நான் ரசிகனாகவே மாறிவிட்டேன். என்னை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்லாமல் உலக கிரிக்கெட்டுக்கு பும்ராவின் செயல்பாடுகள் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!