Sports
NewYork நகரில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்.. T20 உலகக்கோப்பைக்கான அட்டவணையைஅறிவித்தது ICC !
கடந்த 2022-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வியைத் தழுவியது. இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில், ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது.
அடுத்ததாக இந்த ஆண்டு டி20 தொடர் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடக்கவுள்ளது. இந்த தொடரில் அதிகபட்சமாக 20 அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. இந்த நிலையில், இந்த தொடரின் அட்டவணை ஐசிசி அமைப்பு அறிவித்துள்ளது.
வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் மொத்தமாக 29 நாட்கள் நடைபெறுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 26 மற்றும் ஜூன் 27 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டியும், ஜூன் 29ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது.
ஜூன் 1ஆம் தேதி நடக்கும் முதல் போட்டியில் அமெரிக்கா - கனடா அணிகள் விளையாடவுள்ளது. ஜூன் 5ஆம் தேதி இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நியூயார்க் நகரில் வரும் ஜூன் 9-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா A பிரிவில் இடம்பெற்றுள்ள நிலையில், அந்த பிரிவில் கனடா, அயர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளது. இந்த தொடரில் மொத்தம் 4 பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளது. தனது பிரிவில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!