Sports
இந்திய அணி எதிர்காலத்தில் வெல்லவேண்டும் என்றால் KL ராகுல் இதனை செய்ய வேண்டும் - முன்னாள் வீரர் கோரிக்கை !
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்பவர் கே.எல்.ராகுல். கர்நாடகத்தை சேர்ந்த இவர் உள்நாட்டு தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணியில் இடம்பிடித்து தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராக திகழ்ந்து வருகிறார். இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டியிலும் தொடர்ந்து ஆடி வருகிறார்.
கே.எல்.ராகுல் இந்திய அணிக்கு கேப்டனாக பல்வேறு தொடர்களில் அணியை வழிநடத்தியுள்ளார். மேலும், தற்போது அணியின் துணை கேப்டனாகவும் வளம் வருகிறார். ஆனால், சமீப காலமாக அவரின் பார்ம் மிக மோசமாக அமைந்துள்ளது. கில்,இஷான் கிஷன் போன்ற வீரர்கள் வாய்ப்புக்காக காத்து கிடக்க பிசிசிஐ பல்வேறு சந்தர்ப்பங்களில் ராகுலுக்கே அணியில் முக்கியத்துவம் வழங்கியுள்ளது.
சமீபத்தில் முடிவடைந்த உலகக்கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ராகுல் அதில் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் நடுவரிசையில் அணியின் தூணாக தனது திறமையை வெளிப்படுத்தினார். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் நடுவரிசையில் களமிறங்கி அனைவரும் சொதப்பிய நிலையில், சதம் அடித்து அசத்தினார்.
இந்த நிலையில், இந்திய அணி இனி எதிர்காலத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் கே.எல் ராகுல் நடுவரிசையில் ஆட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் பங்கர் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "கே.எல் ராகுல் இந்திய அணிக்காக பல இடங்களில் விளையாடியுள்ளார். தற்போது நடுவரிசையில் விளையாடுகிறார். அவர் நடு வரிசையில் விளையாடுவதால் இந்திய அணிக்கு பல நன்மைகள் கிடைத்திருக்கிறது.
கீழ் வரிசை வீரர்கள் மற்றும் பவுலருடன் இணைந்து விளையாட கூடிய தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. எனவே அவர் அனைத்து விதமாக போட்டிகளிலும் நடுவரிசையில்தான் விளையாட வேண்டும். அவர் நடுவரிசையில் ஆடினால்தான் எதிர்காலத்தில் இந்திய அணி வெற்றிபெறும். ஒரு இடத்தில் நாம் சிறப்பாக விளையாடிவிட்டால் அது தொடர்பாக நல்ல நினைவுகள் நம்முடன் இருக்கும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!