Sports

U19 ஆசிய உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு முன்னேறிய UAE.. முதல் முறையான கோப்பையை வென்ற வங்கதேசம் !

ஆசிய அணிகளுக்கு இடையேயான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பை தொடர் டிசம்பர் 8ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஜப்பான் ஆகிய 8 நாடுகள் பங்கேற்றன,.

இதில் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி தோல்வியை சந்தித்தாலும் ஆப்கானிஸ்தான், நேபாளம், ஆகிய அணிகளை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது. அதே போல பாகிஸ்தான், வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதிப் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணி பாகிஸ்தான் அணியை அதிர்ச்சி தோல்வி அடையச் செய்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வங்கதேச அணி இந்திய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரக அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. இதில் முதலில் ஆடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்த வங்கதேசம் 282 ரன்களை குவித்தது.

பின்னர் ஆடிய ஐக்கிய அரபு அமீரக அணி வங்கதேச ஐயின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 24.5 ஓவர்களில் 87 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 185 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற வங்கதேச அணி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக்கோப்பையை முதல் முறையாக கைப்பற்றியது.

Also Read: "எங்கள் யாரையும் தோனியுடன் ஒப்பிட முடியாது, அவர்தான் எங்கள் தலைவர்"- கே.எல்.ராகுல் நெகிழ்ச்சி !