Sports
"இங்கு பந்தின் வேகம், பௌன்ஸ் மிக அதிகமாக இருக்கிறது" - தென்னாபிரிக்க ஆடுகளத்தை கண்டு மிரண்ட இளம்வீரர் !
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டியின்போது குஜராத் டைட்டன்ஸ் அணிகு எதிரான போட்டியில் 5 பந்துகளில் 5 சிக்ஸர் விளாசிய ரிங்கு சிங் யாரும் நம்பமுடியாத இடத்தில இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அதனைத் தொடர்ந்து கவனிக்கத்தக்க வீரராக மாறினார்.
அதன்பின்னரும் அந்த தொடரில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரிங்கு சிங் கொல்கத்தா அணியின் மிடில் ஆர்டரை தனி ஒருவனாக தாங்கி பிடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக திகழ்ந்தார். பின்னர் நடைபெற்ற உள்நாட்டு தொடர்களிலும் உத்தரப்பிரதேச அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.
இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் இடம்பிடித்தார். அந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய அணியிலும் இடம்பிடித்து அங்கும் சிறப்பாக செயல்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்று இறுதிக்கட்டத்தில் இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார். தொடர்ந்து தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்தான் காரணம் என ரிங்கு சிங் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், " தென்னாபிரிக்க மைதானத்தில் நிலை வேறு விதமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் பேட் செய்தபோது, பந்தின் வேகம் அதிகமாக உள்ளது. மேலும், பந்துகள் அதிக அளவில் பௌன்ஸ் ஆகிறது.
இது போன்ற மைதானங்களில் விளையாட கூடுதல் பயிற்சி தேவைப்படுகிறது. தென்னாப்பிரிக்க ஆடுகளத்தில் என்னுடைய முதல் பயிற்சியில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். ராகுல் டிராவிட் எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த எனக்கு அறிவுரை கூறினார். ராகுல் டிராவிட்டுடன் இணைந்து பயணிக்க கிடைத்த வாய்ப்பு சிறப்பான உணர்வைக் கொடுக்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!