Sports
"சர்வதேச போட்டிகள் குறைவாக இருந்தால் என்ன ? IPL தொடரே போதுமானது" - சூரியகுமார் இப்படி கூற காரணம் என்ன ?
உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வியை சந்தித்தது. அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரை இளம் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை உலகக் கோப்பை தொடரை முடித்துக் கொண்டு, தற்பொழுது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடறில் ஆட உள்ளது. அடுத்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் மண்ணில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள நிலையில், அதை நோக்கியே இந்திய அணியின் பார்வை இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அந்த உலககோப்பைக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்கா தொடர், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் என 6 6 சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. இதனால் இந்திய அணி டி20 உலககோப்பைக்கு சிறந்த முறையில் தயாராகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், உலககோப்பைக்கு தயாராக ஐபிஎல் தொடரே போதுமானது என தற்போதைய இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது உலகக்கோப்பைக்கு இந்தியா தயாராக குறைவான போட்டிகள் இருப்பது குறித்து சூரியகுமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "எங்களிடம் குறைந்த சர்வதேச டி20 போட்டிகள் மட்டுமே இருக்கிறது என்றாலும், முழு ஐபிஎல் தொடரே மீதம் இருக்கிறது. ஐபிஎல் தொடரில் குறைந்தபட்சம் 14 போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாடுவார்கள். அதோடு ஏற்கனவே இந்திய வீரர்களுக்கு அனுபவம் இருக்கிறது. இதனால் உலகக்கோப்பைக்கு தயாராவது சிக்கலாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!