Sports
"இலங்கை கிரிக்கெட்டின் மோசமான நிலைக்கு வீரர்களே காரணம்" - முரளிதரன் பகிரங்க குற்றச்சாட்டு !
கடந்த நவம்பர் 2-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில்முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது.
பின்னர் ஆடிய இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.அதோடு இந்த தொடரில் இலங்கை அணியின் செயல்பாடு மோசமானதாக இருந்து வருகிறது. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கூட இலங்கை அணி மோசமான தோல்வியை சந்தித்தது.
இது போன்ற காரணங்களால் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து இலங்கை நீதிமன்றத்தில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் தொடர்ந்த வழக்கில், இலங்கை அரசின் நடவடிக்கைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. எனினும் கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசு தலையிட்டதாக கூறி, இலங்கை கிரிக்கெட் வாரியத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தற்காலிகமான தடை செய்துள்ளதாக அறிவித்தது.
இந்த நிலையில், இலங்கை கிரிக்கெட்டின் மோசமான நிலைக்கு அந்த அணியின் வீரர்களே காரணம் என அந்நாட்டு முன்னாள் வீரர் முரளிதரன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசியவர் , " உண்மையை சொல்லவேண்டும் என்றால் இலங்கை வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். வீரர்கள் களத்தில் இறங்கியவுடன் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அதனை செய்யவில்லை.
பயிற்சியாளர்கள் களத்திற்கு வெளியே பல விஷயங்களை சொல்லலாம். அவர்கள் பல திட்டங்களை உருவாக்கலாம். ஆனால், களத்தில் வீரர்கள்தான் விளையாடி வெற்றி பெற்று ஆகவேண்டும். நாம் 20 சதவீத போட்டிகளை கூட வெல்லவில்லை. இந்த மோசமான செயல் திறன் ஏன் என்று அவர்கள் சிந்திக்க வேண்டும். தங்களது திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்க வேண்டும்.
எனவே இலங்கை கிரிக்கெட்டின் தோல்விக்கு பயிற்சியாளர்கள் மற்றும் பிற விஷயங்களை காரணமாக காட்டுவதை விட, நிர்வாகிகள் தாங்கள் செய்த தவறு என்ன என்பதை கண்ணாடியில் அவர்கள் பார்க்கவேண்டும்.சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற வீரர்களுடன் போட்டியிடுவதற்கு வீரர்கள் தங்களை நம்ப வேண்டும். இந்த விஷயங்களை இளம் கிரிக்கெட் வீரர்கள் மனதில் பதிய வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!