Sports
"ஒவ்வொரு பிரிவிலும் இந்தியா எங்களை வீழ்த்தி விட்டது" - தோல்வி குறித்து ஆஸ். கேப்டன் கூறியது என்ன ?
50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்த தொடருக்கு பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
இதில் இரு அணிகளிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்ற நிலையில், மூன்றாவது போட்டியில் இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
பின்னர் நான்காவது போட்டியில் வெற்றிபெற்ற இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து கடைசி டி20 போட்டி நேற்று பெங்களுருவில் நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் 154 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன் மூலம் இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில், இந்திய அணி எங்களை ஒவ்வொரு பிரிவிலும் வீழ்த்தி விட்டது என ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வெட் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "இந்த தொடர் எவ்வளவு கடினமாக இருந்தது என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு. இந்த தொடரில் நாங்களும் நன்றாக தான் விளையாடினோம் என நினைக்கிறேன். ஆனால் இந்திய வீரர்கள் ஒவ்வொரு பிரிவிலும் எங்களை விட சிறப்பாக விளையாடி வீழ்த்தி விட்டார்கள். இந்த தொடர் மூலம் நாங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறோம். இந்தத் தொடரில் வாய்ப்பு கிடைத்த இளம் வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.இது போன்ற கடினமான ஆடுகளத்தில் விளையாடும் வாய்ப்பு எங்களுக்கு நிச்சயம் கிடைக்காது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!