Sports
ரூ.3 கோடி மின்கட்டணம் நிலுவை: மின்சாரம் துண்டிப்பு - INDvsAUS போட்டி நடைபெறும் மைதானத்தின் பரிதாப நிலை !
50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியது. இந்த தொடருக்கு பிறகு இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடந்து வருகிறது.
இதில் இரு அணிகளிலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், இளம் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்ற நிலையில், மூன்றாவது போட்டியில் இறுதிக்கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது.
இந்த நிலையில், இன்று நான்காவது போட்டி, இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் மைதானத்தில் நடைபெறுகிறது. ஆனால், இந்த மைதானத்தில், 3.16 கோடி ரூபாய் மின் கட்டணம் கட்டணம் நிலுவையில் உள்ளதால் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் இயக்கப்படவுள்ளது.
இந்த மைதானத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தப்படாமல் ரூ. 3.16 கோடி நிலுவையில் இருப்பதால் 5 ஆண்டுகளுக்கு முன் மைதானத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும் சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் வேண்டுகோள் விடுததால் பார்வையாளர்களின் கேலரிக்கு மட்டும் மின்னிணைப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள டி20 போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளதால் அதற்கு மைதானத்தில் floodlights எனப்படும் மின்விளக்குகளை கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியில் மின்விளக்குகளை ஜெனரேட்டர் மூலம் இயக்க சத்தீஸ்கர் மாநில கிரிக்கெட் சங்கம் முடிவெடுத்துள்ளதாகவும், இதனால் போட்டியின்போது ஜெனரேட்டர் மூலம் மின்விளக்குகள் இயக்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது.
Also Read
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!
-
“விழுதுகள்” ஒருங்கிணைந்த சேவை மையம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!
-
“மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிடுக!” : பிறந்தநாளை முன்னிட்டு துணை முதலமைச்சர் அறிக்கை!
-
நாடாளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு! : அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மறுப்பு!