Sports
13-வது தேசிய சீனியர் ஆடவர் ஹாக்கி: சாம்பியன் பட்டம் வென்றது பஞ்சாப் - மூன்றாம் இடம் பிடித்தது தமிழ்நாடு !
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானம் மேம்படுத்தப்பட்ட நிலையில் அங்கு கடந்த ஆகஸ்ட் மாதம் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கி தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
அதனைத் தொடர்ந்து தற்போது மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் ஆடவருக்கான 13வது தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்றது. கடந்த 17ஆம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்த ஹாக்கி போட்டியில் 28 அணிகள் கலந்து கொண்டன.
இந்த தொடரில் தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியாணா, கர்நாடகா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இதில், அரையிறுதியில் வென்று, பஞ்சாப், ஹரியாணா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. தொடர்ந்து மூன்றாமிடத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.
தமிழ்நாடு, கர்நாடகா அணிகள் மோதிய இந்த போட்டியில், இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்ததால் பெனால்டி ஷூட் அவுட் முறைக்கு ஆட்டம் சென்றது. இதில், 5-3 என்ற கோல்கள் கணக்கில் கர்நாடக அணியை வீழ்த்தி தமிழ்நாடு அணி மூன்றாம் இடத்தை கைப்பற்றியது.
தொடர்ந்து பஞ்சாப், ஹரியாணா அணிகள் மோதிய இறுதிப்போட்டி நடைபெற்றது. பிரதான நேரம் முடிவில் இரு அணிகளும் தலா 2-2 கோல்கள் அடித்ததால் ஆட்டம் டிரா ஆனது. பின்னர் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் 9 - 8 என்ற கோல் கணக்கில் பஞ்சாப் அணி வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த தொடரில் வெற்றி பெற்ற அணிக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோப்பையை வழங்கினார்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!