Sports
ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்து தெரிவிப்பதா ? மேக்ஸ்வெல் மனைவியை விமர்சிக்கும் ரசிகர்கள்- அவரின் பதில் என்ன ?
இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கில் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரோஹித் சர்மா 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஷ்ரேயாஸ் 4 ரன்னுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 81/3 என சரிவை சந்தித்த நிலையில், விராட் கோலி - கே.எல்.ராகுல் இணை நிதானமாக ஆடினர். தொடர்ந்து அரைசதம் விளாசிய விராட் கோலி 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜடேஜா 9 ரன்னுக்கு வெளியேறினார்.
பின்னர் நிதானமாக ஆடிய கே.எல் ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சூரியகுமார் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். ஷமி 6 ரன்னுக்கும், பும்ரா 1 ரன்னுக்கும் ஆட்டமிழக்க, இறுதிக்கட்டத்தில் குல்தீப் 10 ரன்களும், சிராஜ் 9 ரன்களும் குவிக்க இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .
பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக வெற்றிபெற்றது. அதனைத் தொடர்ந்து அந்த அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவரும், ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவியுமான வினி மேக்ஸ்வெல் வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். எனினும் இந்திய நாட்டில் பிறந்து இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு வாழ்த்து தெரிவிப்பதா ? என அவரை ஏராளமானோர் விமர்சித்தனர்.
இந்த நிலையில், அவர்களின் கருத்துக்கு வினி மேக்ஸ்வெல் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தனிப்பட்ட முறையில் வெறுப்புடன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்புபவர்கள் கொஞ்சம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும். நான் பிறந்து வளர்ந்த நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதே சமயம், என் குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் என் கணவர் விளையாடும் அணிக்கும் நான் ஆதரவாக இருக்க வேண்டும். இது சிலருக்குப் புரிவதில்லை. உலகிற்கு எது முக்கியமோ, எது முக்கியமான பிரச்னைகளோ அதில் கவனம் செலுத்துங்கள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!