Sports

விக்கெட் வீழ்த்தி அசத்திய விராட் கோலி, ரோஹித் : தோல்வியே சந்திக்காமல் அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா !

இந்தியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக செயல்பட்டு வருகிறது. இது வரை ஆடிய 8 போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரில் அசைக்க முடியாத அணியாக திகழ்ந்து வருகிறது. இதனை காரணமாக இந்தியா முதல் அணியாக அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி நெதர்லாந்து அணியை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் ரோஹித், கில் ஜோடி அதிரடி தொடக்கம் தந்தனர். கில் 51 ரன்னுக்கும், ரோஹித் 61 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர்.

பின்னர் சிறப்பாக ஆடிய கோலி 51 ரன்னுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த ஷ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஜோடி அதிரடி ஆட்டம் ஆடியது. இருவரும் சதமடித்த நிலையில், இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 410 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 102 ரன்கள் குவிக்க, ஷ்ரேயாஸ் 128 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பின்னர் ஆடிய நெதர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக அந்த அணி 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. மேலும் லீக் போட்டிகளில் தோல்வியே தழுவாத அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்த போட்டியில் இந்திய வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, சூரியகுமார், சுப்மான் கில் ஆகியோரும் பந்துவீசினர். அதில் விராட் கோலி ஒரு விக்கெட்டும், ரோஹித் சர்மா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.அடுத்ததாக அரையிறுதியில் இந்தியா அணி நியூஸிலாந்து அணியை சந்திக்கவுள்ளது.

Also Read: "கிரிக்கெட் வாரியத்துக்கு தடை விதித்த ICC-யின் நடவடிக்கை சட்டவிரோதமானது" - இலங்கை அமைச்சர் கருத்து !