Sports
மேத்யூஸ் இதனை செய்திருந்தால் டைம் அவுட் ஆட்டமிழப்பை தவிர்த்திருக்கலாம் - தினேஷ் கார்த்திக் கூறியது என்ன ?
டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.
இதில் நான்காவது விக்கெட்டாக இலங்கை வீரர் சமரவிக்ரமா ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவரின் ஹெல்மெட்டில் ஸ்டிராப்ஸ் சரியில்லாத காரணத்தால் மைதானத்துக்கு வந்து வேறு ஹெல்மெட்டை கேட்டுள்ளார். அதன்படி இலங்கை வீரர் ஒருவர் ஹெல்மெட்டை கொடுத்துள்ளார்.
இதனால் அவர் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இது குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் புகாரளிக்க விதிப்படி ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் என்ற வகையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் வீரராக மேத்யூஸ் மாறியுள்ளார்.
வங்கதேச அணியின் இந்த செயலுக்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த நேரத்தில் மேத்யூஸ் சமயோஜிதமாக செயல்பட்டிருந்தால் தனது ஆட்டமிழப்பை தவிர்த்திருக்கலாம் என இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், " இலங்கை வீரர் மேத்யூஸ் ஆட்டமிழந்தது வித்தியாசமானது. அண்ட் நேரத்தில் மேத்யூஸ் ஒரு பந்தை எதிர்கொண்டு பின்னர் ஹெல்மெட்டில் பிரச்சனை என்று சொல்லி ஹெல்மெட்டை கேட்டிருந்தால் எதுவுமே நடந்திருக்காது. அந்த சமயத்தில் அவர் களத்தில் விழிப்புணர்வுடன் நடந்து கொண்டார் என்று எனக்கு தோன்றவில்லை. அதே நேரம், இந்த நேரத்தில் டைம்ட் அவுட் விதிமுறையை வங்கதேச அணியினர் கேட்பார்கள் என்று மேத்யூஸ் உள்ளிட்ட யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார்கள்" எனக் கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?