Sports

கிரிக்கெட்டில் நடந்த ஆட்டமிழப்புகள் முதல் முறையான நடந்தது எப்போது ? - Bowled முதல் Timed out வரை !

நேற்று டெல்லியில் நடைபெற்ற உலகக்கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இதில் வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது.

இதில் நான்காவது விக்கெட்டாக இலங்கை வீரர் சமரவிக்ரமா ஆட்டமிழந்த நிலையில், அடுத்த வீரராக ஏஞ்சலோ மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவரின் ஹெல்மெட்டில் ஸ்டிராப்ஸ் சரியில்லாத காரணத்தால் மைதானத்துக்கு வந்து வேறு ஹெல்மெட்டை கேட்டுள்ளார். அதன்படி இலங்கை வீரர் ஒருவர் ஹெல்மெட்டை கொடுத்துள்ளார்.

இதனால் அவர் தாமதமாக பேட்டிங் செய்ய வந்ததால் இது குறித்து வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் புகாரளிக்க விதிப்படி ஏஞ்சலோ மேத்யூஸ் டைம் அவுட் என்ற வகையில் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் சர்வதேச அரங்கில் இந்த முறையில் ஆட்டமிழந்த முதல் வீரராக மேத்யூஸ் மாறியுள்ளார்

இதனிடையே முதல் முறையா நடந்த ஆட்டமிழப்பு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது :

முதல் முறை Caught முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1877.

முதல் முறை Bowled முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1877.

முதல் முறை Run Out முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1877.

முதல் முறை LBW முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1877.

முதல் முறை Stumped முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1877.

முதல் முறை Retired Hurt முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1877.

முதல் முறை Hit Wicket முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1884.

முதல் முறை Obstructing Field முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1951.

முதல் முறை Handling ball முறையில் ஆட்டமிழந்த வருடம் - 1957.

முதல் முறை Retired Out முறையில் ஆட்டமிழந்த வருடம் - 2001.

முதல் முறை Hitting the ball twice முறையில் ஆட்டமிழந்த வருடம் - 2023.

முதல் முறை Timed out முறையில் ஆட்டமிழந்த வருடம் - 2023.

Also Read: மனித உரிமையா அல்லது இரண்டு புள்ளிகளா? - ஆஸ்திரேலிய அணியை விமர்சித்த ஆப்கான் வீரர் - காரணம் என்ன ?