Sports
"இந்திய அணியை 'Chokers' என்று சொல்வீர்களா? - செய்தியாளர் கேள்வியால் எரிச்சலடைந்த தென்னாப்பிரிக்க கேப்டன்!
கிரிக்கெட் வரலாற்றில் அபாயகரமான அணியாக திகழ்ந்த, திகழும் அணிகளில் ஒன்று தென்னாபிரிக்கா. எனினும் உலகக்கோப்பை போன்ற முக்கியமான தொடர்களில் பலம் வாய்ந்த அணியாக நுழைந்து, முக்கியமான போட்டிகளில் தோல்வியைத் தழுவுவதை அந்த அணி வழக்கமாக வைத்துள்ளது.
இதன் காரணமாக அந்த அணியை 'சோக்கர்ஸ்' என கிரிக்கெட் நிபுணர்கள் கிண்டலாக கூறுவர். அந்த வகையில் தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரிலும் தென்னாப்பிரிக்க அணி இதுவரை தான் ஆடியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த தொடரில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற வலிமையான அணிகளை வென்ற தென்னாபிரிக்கா, அசோசியேட் அணியான நெதர்லாந்து அணியிடம் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணியை மீண்டும் 'சோக்கர்ஸ்' என பலரும் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்கு முன்னதாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில், ஒரு செய்தியாளர் "இந்தப் போட்டியில் சொதப்பாமல் (Choke) இருக்க வேண்டும் என உங்கள் அணியினருடன் ஆலோசனை நடத்தினீர்களா?" என்று தென்னாபிரிக்கா கேப்டன் பவுமாவிடம் கேள்வி எழுப்பினார்.
இதனால் எரிச்சல் அடைந்த பவுமா, "உலகக்கோப்பையின் ஒவ்வொரு தருணத்திலுமே அழுத்தம் இருந்துகொண்டுதான் இருக்கும். அதை சிறப்பாக சமாளித்துதான் இந்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம். இனியும் சவால்களும் அழுத்தங்களும் இருக்கும் . ஒரு அணியாக அவற்றையெல்லாம் எந்த அளவுக்கு சிறப்பாக கையாள முடியும் என்பதிலேயே எங்கள் கவனம் இருக்கிறது. 'Choke' என்ற வார்த்தையை எங்கள் முகாமில் நான் இதுவரை கேட்கவில்லை. ஒருவேளை இந்தியா நாளை சிறப்பாக செயல்படாவிடில் நீங்கள் அதை 'Choke' என்று குறிப்பிடுவீர்களா என்றே தெரியவில்லை" என்று கூறினார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!