Sports
வான்கடே மைதானத்தில் சச்சினுக்கு சிலை: இங்கு ரசிகராக நுழைந்து, சாம்பியனாக விடை பெற்றேன்- சச்சின் உருக்கம்!
இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்துசென்றவர் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான். 16 வயதில் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் அதன் பின்னர் செய்தது எல்லாம் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியது.
அதிக ரன்கள், அதிக சதங்கள், அதிக போட்டிகள் என கிரிக்கெட்டின் பல்வேறு சாதனைகளுக்கு அவரே சொந்தக்காரர். அதோடு ஒரு நாள் போட்டியில் 200 அடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், முதல் ஆளாக அதை கடந்து அனைத்தும் முடியும் என்று நிரூபித்தார்.
கிரிக்கெட் உலகின் கடவுளாக போற்றப்படும் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே வீரராக திகழ்ந்து வருகிறார். மேலும் சரவதேச கிரிக்கெட் போட்டிகளில் 30,000 ரன்களை கடந்து யாரும் படைக்காத சாதனைகளை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக இத்தகைய சாதனைகள் படைத்த சச்சின் டெண்டுல்கருக்கு அவரின் சொந்த நகரமான மும்பையில் அமைந்துள்ள வான்கடே மைதானத்தில் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் சார்பில் சிலை திறக்கப்பட்டது. இது குறித்து பேசிய சச்சின், எனது 10 வயதில் முதன் முதலில் இந்த மைதானத்திற்கு ஒரு ரசிகராக நுழைந்தேன்.
பின்னர், 1987ல் நடந்த உலக கோப்பை தொடரில், வான்கடே மைதானத்தில் பந்து எடுத்து தரும் சிறுவனாக இருந்தேன்.அடுத்து பள்ளி அளவிலான கிரிக்கெட்டில் பங்கேற்க இங்கு வந்த போது, கவாஸ்கர் 'டிரசிங் ரூமை' காண்பித்தார். அடுத்த சில ஆண்டுகளில் ரஞ்சி கோப்பை தொடரில் இடம் பெற்றேன்.
2011ல் இங்கு உலக கோப்பை வென்றது மகிழ்ச்சியான தருணமாக இருந்தது. எனது கடைசி போட்டியும் (2013) இங்கு தான் விளையாடினேன்.உண்மையில் வாழ்க்கை ஒரு வட்டம் தான், வான்கடே மைதானத்துடனான எனது பயணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. ஒரு ரசிகராக நுழைந்து, கடைசியில் சாம்பியனாக விடை பெற்றேன். தற்போது இதே இடத்தில் எனக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது சிறப்பானது"என்று கூறியுள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?