Sports
இந்திய பந்துவீச்சில் சிதைந்த இலங்கை : 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா !
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
இதில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணியும் இலங்கை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் முதல் ஒவரிலேயே 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த சுப்மன் கில், விராட் கோலி நிதானமான ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதத்தை கடந்து சதமடிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கில் 92 ரன்களிலும், விராட் கோலி 88 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதிக்கட்டத்தில், ஸ்ரேயாஸ் 56 பந்துகளில் 82 ரன்களும். ஜடேஜா 24 பந்துகளில் 35 ரன்களும் விலாச இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்தது. பின்னர் இந்தியா நிர்ணயித்த 358 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதனால் இந்திய அணி 303 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது இந்திய அணியில் மிக சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி 5 விக்கெட்களையும், , முகமது சிராஜ் 3 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக இந்திய அணி அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!