Sports
ரசிகையை கட்டி அணைத்த ரொனால்டோ.. தண்டனையாக 99 கசையடிகள் வழங்கியதா ஈரான் ? உண்மை என்ன ?
உலகப்புகழ்பெற்ற கால்பந்து வீரரான ரொனால்டோ இங்கிலாந்தில் கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியில் விளையாடினார். அப்போது அவருக்கும் அணியின் பயிற்சியாளரருக்கும் இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டது. முக்கிய போட்டிகளில் ரொனால்டோ வெளியே அமரவைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கும் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து கிளப்புக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்தது. இந்த விவகாரம் பெரிதான நிலையில், ரொனால்டோவை அவரின் சம்மதத்தோடு வெளியேற்றுவதாகவும், அவரோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாகவும் மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அறிவித்தது.
அதன் பின்னர் அவர் சவூதி அரேபியாவின் அல் நாசர் கிளப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு தற்போது சவூதி அரேபியாவில் விளையாடி வருகிறார். அங்கு அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், அவர் இடம்பெற்றுள்ள அல் நாசர் அணி ஆசிய சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்று அந்த போட்டிகள் தற்போது நடந்து வருகின்றன.
இதில் ரொனால்டோவின் அல் நாசர் அணி ஈரானின் பெர்செபோலி அணியை சந்தித்தது. இதற்காக ரொனால்டோ ஈரானுக்கு சென்றார். அங்கு கால்களால் கலையை உருவாக்கும் பாத்திமா என்ற மாற்றுத்திறனாளி பெண் ரசிகர் ரொனால்டோவுக்கு தான் வரைந்த புகைப்படத்தை நினைவு பரிசாக வழங்கினார்.
அப்போது ரொனால்டோ அந்த பெண்ணை கட்டி அணைத்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியானது. ஈரானிய சட்டப்படி பிற பெண்களை அணைப்பது சட்டப்படி குற்றம் என்பதால், ரொனால்டோவுக்கு அந்நாட்டு வழக்கப்படி 99 கசையடிகள் தண்டனையாக வழங்கப்பட்டதாகவும், ரொனால்டோ அடுத்தமுறை ஈரான் சென்றார் அவருக்கு இந்த தண்டனை வழங்கப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்த தகவலை ஸ்பெயினில் உள்ள ஈரானிய தூதரகம் மறுத்துள்ளது. இது குறித்து பேசிய ஈரானிய தூதரக அதிகாரி, "ஈரானில் எந்தவொரு சர்வதேச விளையாட்டு வீரருக்கும் எதிராக எந்த தண்டனையும் வழங்கப்படுவதை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். ரொனால்டோ தனது தீவிர ரசிகரை சந்தித்தது நாட்டில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!