Sports
புள்ளிபட்டியலில் கடைசி இடம்: வங்கதேசம், நெதர்லாந்துக்கும் கீழே சென்ற சோகம்.. பரிதாப நிலையில் ஆஸ்திரேலியா!
ஐசிசி உலகக்கோப்பை தொடர்கள் முதல் முதலாக கடந்த 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. முதல் இரண்டு உலககோப்பைகளை மேற்கிந்திய தீவுகள் அணி வென்ற நிலையில், 1983-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிபெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
அதன் பின்னர் 1987-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. பின் 1991-ல் பாகிஸ்தானும், 1996-ல் இலங்கையும் உலககோப்பையை கைப்பற்றியது. பிறகு 1999-ம் ஆண்டு உலகக்கோப்பையை இரண்டாவது முறையாக வென்ற நிலையில், அப்போதில் இருந்து ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் தொடங்டியது.
ஸ்டீவ் வாக் அவருக்கு பின்னர் ரிக்கி பாண்டிங் ஆகியோர் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி மூன்று விதமான கிரிக்கெட்டிலும் ஆதிக்கம் செலுத்தியது. அதன் தொடர்ச்சியாக 2003 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் நடைபோட உலகக்கோப்பையை வென்று ஹட்டிரிக் சாதனை படைத்தது.
2001-ம் ஆண்டு இந்தியா காலிறுதியில் இந்தியா ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் வரை சுமார் 12 ஆண்டுகள் 34 உலகக்கோப்பை போட்டிகளில் தோல்வியே தழுவாமல் கிரிக்கெட் உலகை கட்டி ஆண்டது. 2011 உலகக்கோப்பையில் தோல்வியை சந்தித்தாலும், 2015-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையை மீண்டும் வென்றது.
இது வரை 12 உலகக்கோப்பை தொடர்கள் நடைபெற்ற நிலையில், அதில் 5 முறை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் மோசமான உலககோப்பையாக திகழ்கிறது. இதுவரை 2 போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்திலும், பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 134 ரன்கள் வித்தியாசத்திலும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இதன் காரணமாக புள்ளிப்பட்டியலில் இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து அணிகளுக்கும் கீழே கடைசி இடத்தில் உள்ளது. ஒரு காலத்தில் கிரிக்கெட்டை கட்டி ஆண்ட அணியின் இந்த பரிதாப நிலையை குறிப்பிட்டு பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இன்னும் 7 போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு இருக்கிறது என்றாலும் தற்போது அந்த அணியின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!