Sports
சொதப்பிய பேட்டிங்.. படுதோல்வியடைந்த இங்கிலாந்து.. நடப்பு சாம்பியனை வீழ்த்தி அசத்திய ஆப்கானிஸ்தான் !
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.
தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் இன்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும், ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர் குர்பாஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதர வீரர்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தாலும், அதிரடி காட்டிய குர்பாஸ் 57 பந்துகளில் 80 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இக்ரம் அலிகில் 58 ரன்களும் இறுதிக்கட்டத்தில், ரஷித் கான் 23 , முஜீப் 28 ரன்களும் குவிக்க 49.5 ஓவர்களில்ஆப்கானிஸ்தான் அணி 284 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் ஹாரி புரூக் மட்டுமே 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதிக்கட்டத்தில் அடில் ரஷீத் 20 ரன்களும் மார்க் வுட் 18 ரன்களும் குவிக்க இங்கிலாந்து அணி 40.3 ஓவர்கள் முடிவில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!