Sports

"இனி இங்கு விளையாட மாட்டோம் என்பதே மகிழ்ச்சி" - இங்கிலாந்து வீரர் விமர்சனம்.. காற்றில் பறந்த BCCI மானம் !

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் 1975ம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பையை 1983ம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கைப்பற்றியது. அதன்பின் 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை தோனி தலைமையிலான அணி வென்றது.

தற்போது 2023ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த உலகக்கோப்பையில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. ஏற்கனவே மழை காலத்தில் இந்தியாவில் உலகக்கோப்பை நடத்துவது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உலகக்கோப்பைக்காக அமைக்கப்பட்டுள்ள மைதானங்கள் மோசமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

உலகக்கோப்பை நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக உலகக்கோப்பைக்கான மைதானங்கள் குறித்து ஐசிசி-யின் ஆய்வு குழு இந்தியா வந்து ஆய்வினை நடத்தியது.அதில் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள தரம்சாலா கிரிக்கெட் மைதானத்தில் சோதனை நடத்தியபோது அங்கிருந்து புற்களில் அதிகளவில் பூஞ்சைகள் இருப்பதை ஐசிசி அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதன் காரணமாக பிசிசிஐ-க்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பதறிய பிசிசிஐ அதிகாரிகள் விரைவில் இந்த பிரச்சனைகள் சரிசெய்யப்படும் என கூறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், தர்மசாலா மைதானம் பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளதாகவும், அங்கு பீல்டிங் செய்வது மிகவும் கடினமாக இருப்பதாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அதன்பின்னரும் அங்கு அவுட் பீல்ட் சரிசெய்யப்படாமல் இருந்துள்ளது. இதனைக் குறிப்பிட்டு இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் சாம் கரன், தரம்சாலா மைதானத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று தரம்சாலா மைதானத்தில் இங்கிலாந்து - வங்கதேசம் இடையிலான ஆட்டம் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால், இந்த மைதானத்தில் அவுட் ஃபீல்டு மோசமாக இருந்ததால் வீரர்கள் காயமடையும் நிலை இருந்தது. இதனால் பீல்டர்கள் கடுமையான திணறியது போட்டியில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த போட்டி முடிந்த பின்னர் பேசிய இங்கிலாந்து வீரர் சாம் கரன், "இந்த போட்டியின் போது வீரர்கள் யாரும் காயமடையவில்லை என்பதே மகிழ்ச்சிதான். வீரர்கள் காயமடையாமல் இருக்க வேண்டியது அவசியம். அதேபோல் இந்த மைதானத்தில் நாங்கள் மீண்டும் விளையாட தேவையில்லை என்பதும் மிக மகிழ்ச்சி. தரம்சாலா மைதானம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது" என்று கூறியுள்ளார்.

Also Read: மைதான ஊழியர்களுக்கு நன்றி.. பாகிஸ்தான் வீரர்களின் செயலால் ரசிகர்கள் நெகிழ்ச்சி !